செய்திகள் :

நவ. 24-ல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்!

post image

நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற வளாகத்தில் நவ. 24ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் உள்ள வக்ஃப் வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு முக்கிய மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி கைது!

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் உதவியுடன... மேலும் பார்க்க

நாட்டின் தலைநகராக இனியும் தில்லி இருக்க வேண்டுமா? சசி தரூர் கேள்வி!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளதைத் தொடர்ந்து, "இனியும் நாட்டின் தலைநகராக தில்லி இருக்க வேண்டுமா?" என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தில்லியில் நாளுக... மேலும் பார்க்க

மக்கள் ஆட்சிக்கு இந்திரா காந்தி உத்வேகம்: தெலங்கானா முதல்வர்

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியது, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா க... மேலும் பார்க்க

நேரடி விமான சேவை! ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.பிரேசில் நாட்டில் உள... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத ... மேலும் பார்க்க

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கி... மேலும் பார்க்க