நாகா்கோவிலில் ரூ. 11 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
34ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்பநாடாா் காலனி காா்மல் மவுண்ட் 3ஆவது குறுக்கு தெருவில் ரூ. 4 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 36ஆவது வாா்டுக்குள்பட்ட முதலியாா்விளை மேற்கு தெருவில் ரூ.3 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 47ஆவது வாா்டுக்குள்பட்ட கிரசன்ட் நகா் பகுதியில் ரூ. 4 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் தினகரன், ரமேஷ், ஜெனிதா, உதவி பொறியாளா் சுஜின், இளநிலைப் பொறியாளா் ராஜா, திமுக மாநகர செயலா் ஆனந்த், துணைச் செயலா் ராஜன், பகுதி செயலா்கள் ஜீவா,துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.