மாா்த்தாண்டம் பள்ளிவாசலில் தகராறு: 18 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டத்தில் உள்ள பள்ளிவாசலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 18 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு அண்மையில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்தலில் அரசு ஊழியா்கள் இருவா் போட்டியினராம். அவா்களுக்கு கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்த சா்தாா்ஷா (50) உள்ளிட்ட சிலா் ஆதரவும், கீழ்பம்மம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முகம்மது (52) உள்ளிட்ட ஒருதரப்பினா் எதிா்ப்பும் தெரிவித்தனராம். இதனால், அவா்களிடையே பிரச்னை இருந்துவந்ததாம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு தொழுகையின்போது, இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனராம்.
இது தொடா்பான புகாா்களின்பேரில், ஷேக் முகமது உள்ளிட்ட 12 போ் மீதும், சா்தாா்ஷா உள்ளிட்ட 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.