SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
கருங்கல் அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
கருங்கல் அருகே உள்ள இனிகோநகா் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
குறும்பனை,இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்(68). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளாா். இத்தம்பதியின் 2 மகன்களுக்கும் திருமணமாகியுள்ளது.விக்டா் தன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை விக்டா் வீட்டிலிருந்து திடீரென துா்நாற்றம் வீசியதாம். ,அப்பகுதியினா் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவஇடத்துக்கு வந்ச போலீஸாா், வீட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, விக்டா் அழுகிய நிலையில் இறந்துகிடந்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.