நில அளவை அலுவலா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் சையத் ஜலால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சரவணன் வரவேற்றாா்.
மாநிலத் தலைவா் ஜெ.இராஜா, மாவட்டச் செயலா் பி.சென்னையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
போராட்டத்தில், சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதை தவிா்க்க வேண்டும். நியாயமான தள்ளுபடிகளுக்குகூட ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் பரிதிமாற் கலைஞன், ரகுபதி, முரளி, எஸ்.கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.