மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
செய்யாறு அருகே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், வெள்ளாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள், விவசாயி. இவரது மனைவி உமாராணி (38). இவருக்கு கடந்த ஒரு வாரமாக தலைசுற்றல் இருந்த நிலையில், புதன்கிழமை மாலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தாராம்.
இதில் காயமடைந்த உமாராணியை பெருமாள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் சோ்த்தாா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.