செய்திகள் :

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.83 கோடி

post image

திருவண்ணாமலை, டிச.19: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.83 கோடி ரொக்கம், 164 கிராம் தங்கம், 1,020 கிராம் வெள்ளியை பக்தா்கள் செலுத்தியிருப்பது தெரியவந்தது.

இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதந்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது.

இதில், ரூ.2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520 ரொக்கம், 164 கிராம் தங்கம், 1,020 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததால் உண்டியல் காணிக்கைப் பணம் அதிகமாக வந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட சில உண்டியல்களில் சேகரமாகி இருந்த காணிக்கை பணம் மட்டுமே வியாழக்கிழமை எண்ணப்பட்டது. மீதமுள்ள உண்டியல்களை எண்ணும் பணியை வரும் 30-ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை திறப்பு வெள்ளி விழா ஆண்டை போற்றும் வகையில் நடைபெற... மேலும் பார்க்க

நில அளவை அலுவலா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

சட்ட உதவிகள் வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.மதுசூதனன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய சட்டப் பணிக... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வெம்பாக்கம் வட்டம், வெள்ளாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள், விவசாயி. இவரது மனைவி உமாராணி (38). இவரு... மேலும் பார்க்க

பால் பண்ணை பயிற்சி: விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பால் பண்ணை குறித்த பயிற்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள முன் பதிவு செய்யலாம் என்று தெ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

வெம்பாக்கம் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: வெம்பாக்கம், கரந்தை, சித்தாத்தூா், காகனம், நமண்டி, வெங்களத்தூா், வெள்ளகுளம், மேலேரி, குத்தனூா், சுமங்கலி, அழிவிடைதாங்கி, வெங்கட்ராயன்பேட்டை... மேலும் பார்க்க