செய்திகள் :

ராகுலுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர். அல்ல; அம்பேத்கருக்கு எதிரானது! காங்கிரஸ்

post image

பாஜக புகாரின் பேரின் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையானது ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால், பாஜகவின் இரண்டு எம்பிக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் தரப்பிலும் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பாஜக எம்பிக்கள் மறித்து தள்ளியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாஜக அளித்த புகாரைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நாடாளுமன்ற காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன கூறினாலும் தில்லி போலீஸ் செய்வார்கள். மகர் திவாரில் நேற்று நடைபெற்றது அனைத்தும் திட்டமிட்ட செயல்.

அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார், அவரை மன்னிப்பு கேட்க நாங்கள் வலியுறுத்தினோம், அதனை திசை திருப்பும் நோக்கில் இதனைத் திட்டமிட்டு செய்துள்ளனர்.

இந்த எஃப்ஐஆர் ராகுல் காந்திக்கு எதிரானது அல்ல, அம்பேத்கருக்கு எதிரானது” என்றார்.

இதையும் படிக்க : 'பாஜக அரசு பயப்படுகிறது; ராகுல் ஒருபோதும் அப்படி செய்யமாட்டார்' - பிரியங்கா காந்தி

அதேபோல், காங்கிரஸ் எம்பி சந்தோஷ் குமார் கூறியதாவது:

“இது பொய் வழக்கு, நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம், பாஜக எம்பிக்கள் எங்களை வழிமறித்து, என்னையும் மற்ற எம்பிக்களையும் தள்ளிவிட்டார்கள். நான் கீழே விழுந்தேன், எனக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

எரிந்து கொண்டிருக்கும் அம்பேத்கர் விவகாரத்தை திசைத்திருப்ப பாஜக புதிய யுக்தியை கையாண்டது. இது பொய்யான வழக்கு, பொதுத் தளத்தில் அனைத்து விடியோக்களும் உள்ளது. சிசிடிவி காட்சிகளும் உள்ளது. ஏன் பொதுத் தளத்தில் வெளியிடாமல் உள்ளீர்கள்? மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்” என்றார்.

ஜெய்ப்பூர் ரசாயன லாரி விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி!

ராஜஸ்தானில் ரசாயன லாரி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்தார்.ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை (டிச. 20) அதிகாலையில் ரசாயன லாரி மோதி நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ப... மேலும் பார்க்க

அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை விசாரணை உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு ஜனவரி 30ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதி... மேலும் பார்க்க

ஓம் பிரகாஷ் சௌதாலா: பிரதமர் மோடி இரங்கல்

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வர... மேலும் பார்க்க

தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி

தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு நிலவியது. தலைநகர் தில்லியில் பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு பீதி... மேலும் பார்க்க

முகலாயப் பேரரசரின் சந்ததியினர் ரிக்‌ஷா இழுக்கின்றனர்! யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க

1984 என அச்சிடப்பட்ட கைப்பை: பிரியங்கா காந்திக்கு பரிசளித்த பாஜக எம்.பி.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவுக்கு 1984 என அச்சிடப்பட்ட கைப்பையை பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி பரிசாக வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பாலஸ்தீன் மற்றும் வங்கதேசம் பற்றிய செய்தி... மேலும் பார்க்க