1984 என அச்சிடப்பட்ட கைப்பை: பிரியங்கா காந்திக்கு பரிசளித்த பாஜக எம்.பி.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவுக்கு 1984 என அச்சிடப்பட்ட கைப்பையை பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி பரிசாக வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பாலஸ்தீன் மற்றும் வங்கதேசம் பற்றிய செய்திகள் அடங்கிய கைப்பைகளை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி 1984 என்று சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்ட கைப்பை ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.