Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அத...
நெல்லை நீதிமன்றம் அருகே துணிகரச் சம்பவம்! ஆஜராக வந்தவர் வெட்டி படுகொலை!
திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
கொலை செய்யப்பட்டவரின் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததையும் மீறி, இவ்வாறான துணிகரச் சம்பவம் நடந்தேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம், முன்பகை காரணமாக நிகழ்ந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க:ஜெய்ப்பூர்: ரசாயன லாரி மோதியதில் 30 வாகனங்கள் எரிந்தது; 5 பேர் பலி!