செய்திகள் :

அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவன் மீது தாக்குதல்! இருவருக்கு கத்திக்குத்து!

post image

அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவனை தாக்கி, இருவரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே அ.குரும்பாபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த கணேசன் - சுதா தம்பதியரின் மகன் சத்தியவாசன் (9). அ.குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற சிறுவனை, அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் அழைத்து, அழுக்கு படிந்த காரில் எழுதியதாகக் கூறி, சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், சிறுவன் சத்தியவர்ஷன், தான் எழுதவில்லை எனக் கூறியுள்ளார். இருப்பினும் அதைக் கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை பூட்டிவிட்டு, சிறுவனை பலமாக தாக்கி உள்ளார்.

கருப்பாத்தாள்

இந்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் சிறுவனைக் காணாத, பெற்றோரும் அவரது உறவினர்களும் சிறுவனைத் தேடி வந்தபோது, மோகன் வீட்டில் சிறுவனின் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தட்டிக் கேட்க சென்ற உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய இருவரையும், மோகன் கத்தியால் குத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டார்.

பாதிப்புக்குள்ளான சிறுவனும், கத்தியால் வெட்டுப்பட்ட செல்வராஜ் கருப்பாத்தாள் ஆகியோர் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சேவூர் அருகே அ.குரும்பபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:நெல்லை நீதிமன்றம் அருகே துணிகரச் சம்பவம்! ஆஜராக வந்தவர் வெட்டி படுகொலை!

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலை... மேலும் பார்க்க

வள்ளுவர் சிலையை 'அறிவின் சிலை'யாகக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை 'அறிவின் சிலை'யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு வெள்ளி விழா கொண்டா... மேலும் பார்க்க

நீதிமன்ற வாயிலில் கொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எங்கும் கொலை; எதிலும்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறும்!

தமிழகத்தில் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க... மேலும் பார்க்க

ரூ.100 கோடியில் சாலைகள், புதிய கட்டடங்கள்.. : ஈரோடு மாவட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள்!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டம் என பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஈரோ... மேலும் பார்க்க

செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியதே அதிமுக அரசுதான்: முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மனிதர்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியதே அதிமுக அரசுதான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பார்க்க