சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கா...
`நிலவோடு பேசும் மழையில்' - ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம்
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் அடுத்தடுத்து `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' என இரண்டு திரைப்படங்களில் ஜோடியாக நடித்தனர்.
இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பேவரைட்டானது. இப்படங்களைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தொடக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் பேசவில்லை.
இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஒரே பகுதிகளுக்கு சேர்ந்து சென்றனர். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இவர்கள் காதல் குறித்தான செய்தியை இன்னும் தீவிரமாக பேச வைத்தது.
விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கும் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன.
குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் வட்டாரம் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.
நேற்றைய தினம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது உறுதியாகவே பலர் சொல்கிறார்கள்.
இது மட்டுமின்றி, இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகமும் விஜய் தேவரகொண்டாவின் குழுவினரிடம் பேசி நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் கிங்டம்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் தம்மா', `தி கேர்ள்ஃப்ரண்ட்' திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.