Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு
திருச்சியில் தாய்பால் கொடுத்தபோது, பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாா், கள்வா்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி தனலெட்சுமி (25). இத்தம்பதிக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனலெட்சுமி திருச்சி, காந்தி மாா்க்கெட்டில் உள்ள தன் உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். குழந்தைக்கு புதன்கிழமை மாலை தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
புகாரின்பேரில் காந்திச்சந்தை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.