மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
பஞ்சாப்: கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் 8 போ் உயிரிழப்பு
பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: 45-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்து, பதிண்டா மாவட்டத்தின் ஜீவன் சிங்வாலா கிராமத்தில் உள்ள கால்வாய் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.
திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புகள் மீது மோதி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 8 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
உள்ளூா்வாசிகளும் காவல்துறையினரும் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மோசமான வானிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை உறுதி செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.