செய்திகள் :

பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு; ரோடு ஷோவில் குழந்தைக்கு பெயர் - விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின்!

post image

விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நேற்று காலை விருதுநகர் வந்தார். மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் வந்த அவருக்கு மாவட்ட எல்லையான சத்திரரெட்டியப்பட்டியில் விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வாகனத்தை விட்டு கீழே இறங்கிய முதலமைச்சர், கட்சியினர் கொடுத்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டதோடு, சிறிது தொலைவு நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதையடுத்து வச்சக்காரப்பட்டி அடுத்த கன்னிச்சேரி புதூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு உற்பத்தி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பலன்கள் சரிவர உங்களுக்கு கிடைக்கிறதா?, ஆட்சியில் ஏதேனும் குறை உள்ளதா, உங்களின் புகார்களுக்கான தீர்வு அதிகாரிகளால் தரப்படுகிறதா? என கேள்விகள் கேட்டு அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டார்.

ஆய்வு

தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் அமர்ந்தபடியே மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முதல் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபம் வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதலமைச்சரை சந்தித்த தம்பதியினர், தங்களின் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்குழந்தைக்கு 'செம்மொழி' என பெயரிட்டு மகிழ்ந்தார்.

ஆய்வு

தொடர்ந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வந்தடைந்த அவர், விருதுநகர் மாவட்ட தி.மு.க கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பேரூர் ஒன்றிய கிளை கழகங்களை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக ஆட்சி அமைந்திட பாடுபட வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாக கூறப்படுகிறது.

வரவேற்பு

முன்னதாக பட்டாசு தொழிலாளர்களை சந்தித்துவிட்டு திரும்பும் போது பட்டாசு ஆலை நுழைவாயிலில் காத்திருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் என்பவர், முதல்வரிடம் தனி கோரிக்கை மனு அளித்தார். அப்போது பேசிய அவர், 'நான் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளேன். டெட் தேர்வு உள்பட அரசு பொது தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு வேலை செய்வதற்கான அனைத்துத் தகுதிகள் இருந்தும் எனக்கு இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை. ஆகவே வாழ்வாதாரம் கருதி எனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மணிகண்டனின் கோரிக்கையை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.

Upset-ல் சீமான்... கட்சி தாவும் தம்பிகள்? | அண்ணாமலைக்கு விரைவில் கல்தா? TVK Vijay Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை.* நாகை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த தொண்டர்கள்!* அண்ணாமலையை ஓரங்கட்டும் மேல... மேலும் பார்க்க

Israel - Gaza: "இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை..." - சவூதி இளவரசர் சல்மான் கடும் கண்டனம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹாமஸ் குழுவுக்கு இடையே 13 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில், இதுவரை குறைந்தது 43,550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்... மேலும் பார்க்க

'திமுக கூட்டணியின் விரிசலுக்கு காத்திருக்கிறதா அதிமுக?' - உதயநிதி பேச்சுக்கு அதிமுக-வின் பதில் என்ன?

தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம்!துணை முதல்வர் உதயநிதியின் விமர்சனம் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் பேசினோம், "உதயநிதி சொல்வதில் துளி கூட உண்மை... மேலும் பார்க்க

Maharashtra: பாஜக மீதான காங்கிரஸின் வசைக்கு எதிர்ப்பு; சர்ச்சையான மகா. தேர்தல் களம்; பின்னணி என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவ... மேலும் பார்க்க

`மோடி, அமித் ஷா பைகளைச் சோதித்தீர்களா?' - தேர்தல் அதிகாரிகள் மீது உத்தவ் தாக்கரே பாய்ச்சல்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தி... மேலும் பார்க்க