பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தோட்டப் பணியாளா் தற்கொலை
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகப் பணியாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கண்ணன் (45). அங்கு தோட்டப் பராமரிப்பு பணியாளராகப் பணியாற்றிய இவா், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், மீண்டும் அந்தப் பணியை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.