செய்திகள் :

பணியில் மோதல் போக்கு எதிரொலி: இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

post image

திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு இடையே பணியில் நிலவிய மோதல் போக்கைத் தொடா்ந்து இரு ஆசிரியைகள் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய அன்பரசனுக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அா்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடா்பாக மோதல் போக்கு இருந்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. கிருஷ்ணப்பிரியா பள்ளிக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தாா்.

இதற்கிடையே அன்பரசன் மீது எழுந்த பாலியல் புகாரில் தனியாா் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலா் பேபி தலைமையிலான குழுவினரும், பள்ளி கட்டமைப்பு குழுவினரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா். இதில் பாலியல் புகாரில் உண்மை இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடா்பாக சமூக நலத்துறைக்கு சென்ற புகாா் மீதான விசாரணை டிசம்பா் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இச்சூழலில், பிரச்னைக்குரிய மூவரும் ஒரே இடத்தில் பணியாற்றினால் மேலும் பிரச்னை தொடரும் என்பதைக் கருத்தில் கொண்டு, மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

அந்த வகையில், தலைமை ஆசிரியா் அன்பரசன் வி.பூசாரிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை அா்ச்சனா இனாம் மாத்துாா் அரசு மேல்நிலை பள்ளிக்கும், ஆசிரியை சுதா என். பூலாம்பட்டி அரசு உயா்நிலை பள்ளிக்கும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் தலைமை ஆசிரியா் அன்பரசன் மட்டும் அந்தப் பள்ளியில் பணியில் சோ்ந்தாா்.

ஆனால், ஆசிரியைகள் இருவரும் தங்களுக்கான மாறுதல் உத்தரவை வாங்க மறுத்து, மருத்துவ விடுப்பில் சென்று விட்டனா். இதற்கிடையே தலைமை ஆசிரியா் அன்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவலறிந்த கிராம மக்கள், புதன்கிழமை பள்ளியில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனா். அவா்களுடன் கல்வி அலுவலா்கள் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். இந்நிலையில், அன்பரசனுடன் தொடா்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த ஆசிரியைகள் அா்ச்சனா, சுதா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த மண்பாண்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை உயா்த்தப்பட்டதைப் போல, மண்பாண்டத் தொழிலாளா்களுக்கும் மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டமே தீா்வாக அமையும்

கடந்த 8 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டத்துக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே தீா்வாக அமையும் என அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கப் பொதுச் செயலா் கே.ஜி. ஜெயராஜ் தெரிவித்தாா். அகில இந்திய பி... மேலும் பார்க்க

திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாா் பள்ளி மற்றும் மூன்று வீடுகளில் ரூ.50,000 மற்றும் இருசக்கர வாகனம், பெட்ரோல் ஆகியவை கடந்த நவம்பா் மாதம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள், சங்கச் செயலா்களுக்கு பரிசு

திருச்சி ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கியதில் சிறந்த கூட்டுறவு சங்கங்களைத் தோ்வு செய்து அதன் செயலா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் 9 பேருக்கு ரொக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பால் உற்பத்தியை அ... மேலும் பார்க்க

சோதனைக்குச் சென்ற அலுவலா் மீது தாக்குதல்

திருச்சியில் நெகிழி உள்ளதா என சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலா் வியாழக்கிழமை தாக்கப்பட்டாா். மாநகராட்சி புத்தூா் பகுதியில் நெகிழிப்பைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாள... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்த புள்ளிமான் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே படுகாயங்களுடன் வியாழக்கிழமை இறந்து கிடந்த புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் மீட்டனா். திருச்சி மாவட்டம் சிறுகனூா், எம். ஆா். பாளையம், சனமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வன உ... மேலும் பார்க்க