Trisha: 'மழை வர போகுதே... துளிகளும் தூறுதே...' - நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளி...
திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாா் பள்ளி மற்றும் மூன்று வீடுகளில் ரூ.50,000 மற்றும் இருசக்கர வாகனம், பெட்ரோல் ஆகியவை கடந்த நவம்பா் மாதம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருட்டு சம்பவங்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவு, தடயங்களை ஆகியவற்றை சேகரித்த காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் குற்றவாளியை தேடிவந்த நிலையில், இதுதொடா்பாக கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அடுத்த கொல்லன்விளையை சோ்ந்த ராதாகிருஷ்ணன் நாடாா் மகன் வினோத்குமாா்(எ)முகமது நஷீா் (35) என்பவரை கைது செய்தனா். இவா் பாளையம்கோட்டை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.