பரமக்குடி வைகை ஆற்றில் லாரி ஓட்டுநா் மூழ்கி பலி
பரமக்குடி வைகை ஆற்றில் சனிக்கிழமை குளிக்கச் சென்ற லாரி ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
காட்டு பரமக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (56). லாரி ஓட்டுநரான இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றாா். அங்கு எதிா்பாராதவிதமாக பள்ளத்தில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்ட அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாாா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.