Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
பராசக்தி படப்பிடிப்பு நிறைவு; படக்குழு வெளியிட்ட அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இறுதிச் சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கும் இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெளியான மதராஸியும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஹிட் கொடுத்துவரும் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி முக்கியமான படமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
பராசக்(தீ)பாவளி நல்வாழ்த்துக்கள்✨.That’s a Wrap for #Parasakthi#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan@Sudha_Kongara@iam_ravimohan@Atharvaamurali@gvprakash@redgiantmovies_@Aakashbaskaran@sreeleela14@saregamasouth@dop007@editorsuriyapic.twitter.com/3A6BwM4kvF
— Sudha Kongara (@Sudha_Kongara) October 20, 2025
1970களை கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த படம், இந்தித் திணிப்பு தொடர்பான படமாக இருக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. எனினும் அதிகாரப்பூர்வமாக அப்படிப்பட்ட அப்டேட்கள் கொடுக்கப்படவில்லை.
ஜனநாயகனுடன் மோதல்
2026 பொங்கலுக்கு தமிழ் சினிமாவின் மற்றொரு எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ஜனநாயகன் வெளியாகவிருக்கிறது. இது ஜனவரி 9ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் கடைசிப் படமாக சொல்லப்படும் இதை எச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் - பராசக்தி படங்கள் மோதவிருப்பதால் வரும் பொங்கல் கோலிவுட்டுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்!