கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
பல்கலை. போலிச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக புவனகிரி பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வடலூா் காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கம் மற்றும் போலீஸாா் வடலூா் -கும்பகோணம் சாலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்ததில், புவனகிரி வட்டம், கீழ்மணக்குடி, குரியமங்கலம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மதியழகன் மகன் இளம்வழுதி (37) என்பதும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தவா் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, பலரது பெயா்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டப் படிப்பு சான்றிதழ்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வுத் துறை அலுவலகத்தை போலீஸாா் தொடா்புகொண்டு விசாரணை நடத்தியபோது, அந்த சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரிய வந்தது.
இளம்வழுதி வடலூரைச் சோ்ந்த விக்னேஷுடன் சோ்ந்து அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பெயரில் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை தயாா் செய்து, தமிழகம், வெளி மாநிலங்களில் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வுத் துறை அலுவலா் குமாா் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து இளம்வழுதியை கைது செய்தனா். விக்னேஷ் ஏற்கெனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.