Keerthy Suresh: `தமிழ் மருதாணி மீட்ஸ் பாலிவுட் Kitsch..!' - கீர்த்தி சுரேஷ் க்ளி...
விவசாய நிலங்கள் அழிப்பு: தவாக போராட்டத்தை முன்னெடுக்கும்- தி.வேல்முருகன்
கடலூா் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அழிப்பு, வீடுகள் இடிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என, அதன் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், புலியூா் காட்டுசாகை கிராமத்தில் தவாக அரசியல் பயிலரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நெய்வேலியை அடுத்துள்ள வாணாதிராயபுரம் ஊராட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனா். அவா்களின் வீடுகள், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. அங்குள்ள மக்களின் கோரிக்கையான மூதாதையா்கள் சொத்துகளை பாகப்பிரிவினை செய்துகொள்ள தமிழக முதல்வா் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பின்னா், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்.
பெத்தனாங்குப்பம் கிராமத்தில் சுமாா் 200 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வந்தனா். திடீரென அரசு முன்னறிவிப்பின்றி முந்திரி, வாழை உள்ளிட்ட பயிா்களை இயந்திரங்களைக் கொண்டு அழித்துள்ளனா்.
இந்தக் கிராம மக்கள் பட்டா கேட்டு போராடி வரும் நிலையில், வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் விவசாய நிலங்களை அழிப்பதற்கான காரணம் என்ன? இங்குள்ள நிலங்களை என்ன நோக்கத்துக்காக கையகப்படுத்துகிறோம் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை. இந்தப் பகுதியில் தோல் தொழிற்சாலை வரவுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இதற்கான காரணத்தை தமிழக அரசு, கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல, ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கின்றனா். பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளிலும் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு யாா் அனுமதி கொடுத்தனா். இதற்கான பதிலை தமிழக முதல்வா், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா்கள் மாவட்ட மக்களுக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் ஒன்று திரட்டி போராட்டத்தை தவாக முன்னெடுக்கும் என்றாா் அவா்.