செய்திகள் :

பழனிசாமி பெயர் தவிர்ப்பு; அதிருப்தியை வெளிக்காட்டிய பேனர்? - செங்கோட்டையன் கூட்டத்தில் என்ன நடந்தது?

post image

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தி தெரிவித்தது, அதிமுக மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் குவிந்ததால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையன்

இந்நிலையில், ஈரோடு லக்கம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வழக்கமாக சாலையில் தொடங்கி மேடையில் வைக்கப்படும் கட்சி பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைப்படங்கள் இடம்பெறும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறிதாகவும் போடப்படும். ஆனால், லக்கம்பட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வலதில் ஜெயலலிதாவின் முழு உருவப் படமும், இடதில் எம்ஜிஆரின் முழு உருவப் படமும் நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் படமும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி விட்டுத்தான் மற்ற நிர்வாகிகள் பெயரை செங்கோட்டையன் பேசி வந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை மட்டும் கூறி, எடப்பாடி பழனிசாமியின் தவிர்த்துவிட்டு மற்ற நிர்வாகிகளின் பெயரைக் கூறி பேசத் தொடங்கினார். தனது பேச்சில் ஓர் இடத்தில் மட்டும் பொதுச்செயலாளரின் கட்டளையின்பேரில்தான் என்று இந்தக் கூட்டம் நடைபெறுவதாக கூறிய செங்கோட்டையன்... அப்போதும்கூட, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடவில்லை.

பொதுக் கூட்டம்

இதற்கு முன்னதாக பேசிய செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களும் பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினருமான பண்ணாரி, முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைத் தவிர்த்துவிட்டே தங்களது பேச்சை முடித்தனர். ``எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்" என்று தனது ஆதங்கத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தினார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையிலான விரிசலை வெளிப்படுத்தும் விதமாத இருப்பதாக அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமியின் பெயரைத் தவிர்த்தது மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படத்துக்கு நிகராக செங்கோட்டையனின் படம் பேனரில் போடப்பட்டது அதிமுக வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்க... மேலும் பார்க்க

Kamal: நேற்று அமைச்சர், இன்று துணை முதல்வர்... கமல்ஹாசனை நேரில் சந்தித்த உதயநிதி!

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கித் தோல்வியடைந்தார். அதி... மேலும் பார்க்க

மலக்குழி மரணங்கள்: சுத்தம் செய்ய வேண்டியது பாதங்களை அல்ல; உங்கள் மண்டையை!

"இனி ஒரு போதும் உங்கள் குப்பைகளில் ஒரு துரும்பைக் கூட நாங்கள் எடுக்க மாட்டோம்", "நாங்களும் மனிதர்கள்தான்" - அமெரிக்காவிலுள்ள மெம்பிஸ் நகரம் ஆப்ரோ அமெரிக்கத் தூய்மை பணியாளர்களால் ஸ்தம்பித்தது. எங்குப் ... மேலும் பார்க்க

``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது..."- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ... மேலும் பார்க்க

கழுகார்: 'கோட்டை' சீனியருக்கு 'கீ' கொடுத்தாரா தங்கமான மாஜி? டு சிக்கலில் மாட்டிய 'சக்கர'ப் புள்ளி!

செம கடுப்பில் அதிகாரிகள், நிர்வாகிகள்!கப்பத்தை உயர்த்திய ஆளுங்கட்சிப் பிரமுகர்...'ஜில்' மாவட்டத்தில், மாநில அரசுத் திட்டம் முதல் மத்திய அரசுத் திட்டம் வரை எல்லாவற்றுக்கும் கப்பம் வசூலித்துவந்தார் அந்த... மேலும் பார்க்க

ஊட்டி: 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?

மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் ... மேலும் பார்க்க