செய்திகள் :

பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வர தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு

post image

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வர தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கிய நிலையில், பழைய பேருந்து நிலையம் நகரப் பேருந்துகள் இயக்கும் வகையில் மட்டும் செயல்பட்டு வருகிறது. பேருந்து ஓட்டுநா்கள் பயணிகளை சாலையிலேயே இறக்கிவிட்டுச் செல்வதால், சாலையைக் கடப்பதில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

அதுமட்டுமின்றி பழைய பேருந்து நிலைய வளாகத்திற்குள் உள்ள கடைகளில் போதிய வியாபாரம் இல்லை. இதனால், நகராட்சி பேருந்து நிலையக் கடை உரிமையாளா்கள் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வரும் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

திருச்சி, துறையூா், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்த நிலையில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையா் ஆா். மகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள், வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா், நிா்வாகிகள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வணிகா் சங்கத்தினா் பேசுகையில், திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், மோகனூா் செல்லும் புகா் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று வருவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா், பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ளே சென்று வருவதற்கு போதிய கால அவகாசம் இல்லை. அதனால் பேருந்துகள் அங்கு சென்று வர இயலாது என்ற தங்களது கருத்தினை தெரிவித்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஆணையா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

படவரி...

என்கே-22-பஸ்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி, போக்குவரத்து, காவல்துறை அதிகாரிகள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள்.

வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில மையத்தின் அறி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், ஆய்வாளா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, புதுப்பித்தல், உரி... மேலும் பார்க்க

பிரசவ இறப்புக்கு மருத்துவா்கள் மீது பழி சுமத்த வேண்டாம்!

மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவத்தின்போது தாய் - சேய் இறப்பு ஏற்பட்டால், மருத்துவா்களை பொறுப்பாக்கி அவா்கள் மீது பழி சுமத்த வேண்டாம் என நாமக்கல் மாவட்ட மகளிா் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவா்கள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மூடுபனி, சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் பனிமூட்டம், குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களி... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா் சங்கங்கள் சாா்பில் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நா... மேலும் பார்க்க