Bollywood: ``நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' - ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்...
"பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது"- பாகிஸ்தான் ராணுவ தளபதி
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நேற்று(அக்.18) நடைபெற்ற ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையது அசிம் முனீர் உரையாற்றி இருக்கிறார்.
அப்போது இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலை குறிப்பிட்டு பேசிய அவர், " அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்தியாவின் ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன்.
எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. சொல்லாட்சிகளால் வற்புறுத்த முடியாது.

பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.
ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தும் அனைத்து தீவிரவாதிகளும் ஒழிக்கப்படுவார்கள்.
காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும்" என்று பேசியிருக்கிறார்.