வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
பாபர் அசாம் அரைசதத்தினால் தோல்வியடைந்த பாகிஸ்தான்..! முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்!
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். ஃபகார் ஸ்மான் காயம் காரணமாக சரியாக விளையாட முடியவில்லை.
அதிகமாக டாட் பந்துகள் விளையாடியதால் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது.
தோல்விக்குக் காரணம் பாபர் அசாம்
இந்த நிலையில் முன்னாள் வீரரும், முன்னாள் கேப்டனுமான முகமது ஹபீஸ் கூறியதாவது:
பாபர் அசாம் முன்னணி வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் 18,000-20,000 ரன்களுக்கு அருகில் இருக்கிறார். ஆனால், அவரது நோக்கம் என்ன? அரைசதம் அடித்ததும் திருப்தியடைந்த மாதிரி இருக்கிறார். ஆனால், பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
பாபர் அசாமின் பேட்டிங் ஆட்டத்தை இன்னும் முன்னோக்கி எடுத்துச் சென்றால் அது மதிப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கும். ஆனால், அவரது அரைசதம் பாகிஸ்தானை தோற்கடித்தது.
பவர்பிளேவில் ஏன் நல்ல நோக்கத்துடன் ஆட்டத்தை தொடங்கக் கூடாது? எனக் கோபமாக பேசி முடித்தார்.