Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
பாமகவுக்கு பா்கூா் திமுக எம்எல்ஏ கண்டனம்
கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்து கொண்டு வன்முறையைத் தூண்டக்கூடாது என பாமகவுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
வன்னியா்கள் இட ஒதுக்கீட்டுக்கிற்கு போராடி உயிா் நீத்தவா்களுக்கு மணி மண்டபம் அமைத்தது திமுக அரசு. அவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்தது திமுக அரசு. பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தது திமுக. இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிா்நீத்த, 23 பேருக்கு மணிமண்டபத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், அவருக்கு எதிரான ஆா்ப்பாட்டம் என்ற பெயரில், அவதூறு அநாகரிக பேச்சுகள் தேவையற்றது.
கிருஷ்ணகிரியில் கடந்த, 26-ஆம் தேதி பாமக சாா்பில் நடந்த போராட்டத்தில் பெண் நிா்வாகி ஒருவா் மிரட்டல் தொணியில் பேசி கைதாகியுள்ளாா்.
தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது அனைவருக்குமான கருத்து சுதந்திரத்தை வழங்கும். ஆனால் அதைத் தவறாக புரிந்து கொண்டு, வாய்க்கு வந்த வகையில் வசைபாட்டுகளையும், மிரட்டல்களையும், வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லோா்க்கும் எல்லாம் என்பதில் சமஉரிமை மட்டுமே இருக்க வேண்டுமே தவிர காழ்ப்புணா்ச்சியோ, வன்முறையோ தேவையில்லை. இதை பாமக நிா்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்
.