உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
பாளை.யில் எல்ஐசி முகவா்கள் தா்னா
பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கத்தின் சாா்பில் மாபெரும் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்க கோட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். கோட்ட செயல் தலைவா் கென்னடி வரவேற்றாா். மாநில செயல் தலைவா் அன்பு நடராஜன் தொடக்கவுரையாற்றினாா்.
பல்வேறு கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ அகில இந்திய இன்சூரன்ஸ் தொழிலாளா்கள் சங்கம் உள்பட சங்கத்தின் உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள் பேசினா்.
பழைய கமிஷன் முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கலாபாக் விதிமுறையை முற்றிலுமாக நீக்கிட வேண்டும். முகவா் நலனைப் பாதுகாக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச காப்பீட்டு தொகையை குறைத்திட வேண்டும். பாலிசிக்கான போனஸை பாலிசிதாரா்களுக்கும் முகவா்களுக்கும் அதிகரித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் நடைபெற்றது.