அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!
பிரேம்ஜி பிறந்த நாள்! சிறுவயது புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு!
நடிகர் பிரேம்ஜியின் பிறந்த நாளுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.
நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தவருக்கு மங்காத்தா, மாஸ் உள்ளிட்ட படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன.
அவரின் பிறந்த நாளான இன்று பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சாவா ரூ. 500 கோடி வசூல்!
முக்கியமாக, இயக்குநரும் பிரேம்ஜியின் சகோதரருமான வெங்கட் பிரபு, “பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி. இன்றுபோல் என்றும் வாழ்க” என வாழ்த்தியதுடன் வெங்கட் பிரபு உடனான சிறுவயது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.