Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
புதிய நியாய விலைக் கடை திறப்பு
கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூா் கிராமம், நடுத்திட்டு பகுதியில் ரூ12.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தனி அலுவலா் செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாமலை முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் ஏழுமலை வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து, பொருள்கள் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
விழாவில், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சிவக்குமாா் (சோமாசிபாடி), குப்புசாமி (வேடநத்தம்), திமுக நகரச் செயலா் அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.