புதுச்சேரி: விடுமுறை நாள்களை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாள் அறிவிப்பு
புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரியில் ஏப்ரல் 28 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகைில் எதிர்வரும் மாதத்தில் மூனறு சனிக்கிவமகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 2, 30 தேதிகளிலும், நவம்பர் 15 ஆம் தேதிகளில்(சனிக்கிழமைகள்) திங்கள், செவ்வாய், புதன்கிழமை பாட அட்டவணைப்படி பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க |மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!