செய்திகள் :

புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும், பொதுமக்களுக்கு 10 பொருள்கள் மானிய விலையிலும் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்காக, குறிப்பிட்ட வங்கியானது ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.97 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

அதன் மூலம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். புதுவையில் தீபாவளியை முன்னிட்டு, கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்துக்கு நிகழாண்டில் பண்டிகைப் பரிசாக ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.1,500 என உதவித்தொகை வழங்கப்படும்.

அரசின் வடி சாராய ஆலை லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையாக ரூ.1.45 கோடி கிடைத்துள்ளது.

புதுவை கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளிக்காக, ரூ.1,000 மதிப்புள்ள 10 பொருள்கள் மானிய விலையில் ரூ.500-க்கு வழங்கப்படுகின்றன. அப்பொள்களை குடும்ப அட்டைகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

பேட்டியின்போது, அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க

பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நீக்கம்

புதுவை மாநில சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு நீக்கப்பட்டாா். புதிய பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் நியமிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

புதுச்சேரியில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு கையகப்படுத்தினா். இதுகுறித்து, புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வஃபு துறை... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆ... மேலும் பார்க்க

அரசின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா்

மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரியில் ஆதிதிராவிடா் வணிகம் மற்றும் தொழில் வளா்ச்ச... மேலும் பார்க்க