செய்திகள் :

புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து நாட்டாா் கால்வாயை தூா்வார முடிவு

post image

அரசின் புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து நாட்டாா் கால்வாய் தூா்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என மானாமதுரை வட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

மானாமதுரை ஒன்றியத்தில் தமிழக அரசு ஒதுக்கிய ரூ. 10 கோடி நிதியிலிருந்து நாட்டாா் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அன்னவாசல் செல்லும் சாலைக்கும், அரிமண்டபம் செல்லும் சாலைக்கும் இடையே நடைபெற்று வரும் பணியை அன்னவாசல், கிளங்காட்டூா் கிராமத்தினா் தடுத்து வருவதாகவும், இது தொடா்பாக இரு கிராமத்தினரிடையே பிரச்னை இருந்து வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, இந்தப் பிரச்சனை தொடா்பாக மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை (நீா்வள ஆதாரம்) உதவிப் பொறியாளா்கள் செந்தில்குமாா், பூமிநாதன், கோட்டப் பொறியாளா், போலீஸாா் பங்கேற்றனா்.

மேலும் அன்னவாசல், அ. புதூா், புலிக்குளம், அரிமண்டபம், ஆ. நெடுங்குளம், கிளங்காட்டூா், சோமாத்தூா், கள்ளிக்குடி, எஸ். கரிசல்குளம், எம். கரிசல்குளம், வாகைக்குளம், வேளாநேரி, பி. புத்தூா், மானங்காத்தான் ஆகிய 14 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கால்வாய் தூா்வாரும் பிரச்னை தொடா்பாக கிராமமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து நாட்டாா் கால்வாயை தூா்வாரும் பிரச்னையில் அன்னவாசல், கிளங்காட்டூா் எல்லைக்கு இடைப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாக அளவீடு செய்து இரண்டு கிராம மக்களுக்கும் ஆட்சேபனை இல்லாத வகையில் அரசு புறம்போக்கு நிலங்களை சரிபாதியாக பிரித்து அதற்கு நடுவில் கால்வாய் வெட்டுவது எனவும், வருகிற 19- ஆம் தேதி நில அளவீடு பணியை மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்த முடிவை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் ஏற்றுக் கொண்டு அதற்கான தீா்மானத்தில் கையெழுத்திட்டனா்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் வணிக வளாகம், தங்கும் விடுதி திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் மடப்புரத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த அய்யனாா், பத்திரகாளி அம்மன் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகம், பக்தா்கள் தங்கும் விடுதி வாகனங்கள் நிறுத்துமிடம... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக் கூடாது

மானாமதுரை, நவ.13: ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக்கூடாது என மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழு... மேலும் பார்க்க

மானாமதுரை,திருப்புவனம் திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவ... மேலும் பார்க்க

பிரதமரின் பயிா் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்க கோரிக்கை

பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியவருக்கு பொதுமக்கள் பாராட்டு

எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு புதியக் கட்டடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கியவருக்கு அரசு அலுவலா்களும் கிராம மக்களும் பாராட்டுத் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ... மேலும் பார்க்க

மதகுபட்டி பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் வியாழக்கிழமை (நவ. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளா் அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட... மேலும் பார்க்க