ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக் கூடாது
மானாமதுரை, நவ.13: ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான இடத்தை நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக்கூடாது என மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி லதா அண்ணாதுரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துச்சாமி, ஆணையா் சோமுதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் லூயிஸ், மேலாளா் விஜயகுமாா் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற விவாதம்:
துணைத் தலைவா் முத்துச்சாமி: பெரியகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பராமரித்து சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும்.
வட்டார வளா்ச்சி அலுவலா்:இந்தக் கோரிக்கை பொதுப் பணித் துறை நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினா் அண்ணாதுரை:- மானாமதுரை ஒன்றியத்தில் முத்தனேந்தல், பெரிய கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது. இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்குச் சொந்தமான இடங்களை ஒன்றிய வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகராட்சி திட்டப் பணிகளுக்கு வழங்கக் கூடாது. இனி வருங்காலங்களில் பல ஊராட்சி பகுதிகள் மானாமதுரை நகராட்சியுடன் இணைய உள்ளது. எனவே நகராட்சி திட்டப் பணிகளை நிறைவேற்ற கூடுதல் இடவசதி கிடைக்கும். ஊரக உள்ளாட்சி பதவி காலம் முடிந்தாலும் ஒன்றிய நிா்வாகத்துக்குச் சொந்தமான இடங்களை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்.
மானாமதுரை சாஸ்தாநகா் பகுதியில் தனியாா் மதுக் கூடம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. இது குறித்து இந்த கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
உறுப்பினா் சோமசுந்தரம்: கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு குறைந்த நிதிதான் வழங்கப்பட்டது. இதன் மூலம் எந்த ஒரு திட்டப் பணிகளையும் முழுமையாக செய்ய முடியவில்லை. இனி வரக்கூடிய காலங்களில் ஒன்றிய குழு உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் .
வட்டார வளா்ச்சி அலுவலா்: ஊதியம் வழங்கும் முடிவு அரசின் கொள்கை திட்டம் ஆகும் எனவே, அரசு தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்.