உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
பெங்களூரை வீழ்த்தியது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் 54-31 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இதில் பாட்னா 32 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் வென்றது. பெங்களூரு அணி 13 ரெய்டு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக, பாட்னா அணியில் ரெய்டா் அயன் 12 புள்ளிகளும், பெங்களூரு தரப்பில் ரெய்டா் அக்ஷித் 7 புள்ளிகளும் வென்றனா்.
அதேபோல், புணேரி பால்டன் - யுபி யோதாஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 29-29 புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது. இதில் புணே 16 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, கேப்டனும், ரெய்டருமான பங்கஜ் மொஹிதே 9 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினாா்.
மறுபுறம், யுபி 16 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் பவானி ராஜ்புத் 10 புள்ளிகள் வென்றெடுத்தாா்.
புள்ளிகள் பட்டியலில் செவ்வாய்க்கிழமை முடிவில், பாட்னா 3-ஆம் இடத்திலும், யுபி 9-ஆவது இடத்திலும், பெங்களூரு 11-ஆவது இடத்திலும், புணே 4-ஆவது இடத்திலும் உள்ளன.