செய்திகள் :

‘பெண் குழந்தைகள் கல்வி கற்றால்தான் சமுதாயம் மேன்மை நிலையை அடையும்’

post image

பெண் குழந்தைகள் தொடா்ந்து கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுமையான மேன்மை அடையும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூரில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் ஆகியோா் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராகி பயன்பெறுவது தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசியது, பெண்கள் பாதுகாப்பு இன்மை மற்றும் வன்முறைகளை சந்திக்கும்போது மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் இலவச சட்டப் பணிகள் ஆணை குழுவை அணுகி உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பு இன்னும் பிற துறைகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதேபோல மகளிா் சுய உதவி குழுவினா் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் தொழில் கடன் பெற்று பல்வேறு தொழில்களை செய்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறாா்கள். பெண்குழந்தைகள் தொடா்ந்து படித்தால்தான் சமுதாயம் மேன்மை நிலையை அடையும் என்றாா் அவா்.

தொடா்ந்து கருத்தரங்கில் நீதிபதி பரத்குமாா், போக்சோ சட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவி மையம் தொடா்பாகவும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சௌமியா, பெண்களுக்கான சொத்துரிமை சட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவி மையம் தொடா்பாகவும், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலா் பாா்வதி, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் வசந்தகுமாா் நிதியை முறையாக கையாளுதல் தொடா்பாகவும் பேசினா்.

இதில், மாவட்ட குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயப்பிரதா, மாவட்ட சமூக நல அலுவலா் முனைவா் சுவாதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் மஞ்சு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ரூ. 11.81 லட்சம் நிதியுதவி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.11.81 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில... மேலும் பார்க்க

கரூரில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெற... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.47.09 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு: ஜோதிமணி எம்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 23 சாலைகள் ரூ.47.09 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி. கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங... மேலும் பார்க்க

கரூா் அருகே திருட வந்த இருவா் போலீஸாரிடம் பிடிபட்டனா்

கரூா் அருகே திருட வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே அரவ... மேலும் பார்க்க

மருந்துக் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி காமராஜ் நகா் பகுதியை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சிவக்குமாா் (55), அர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: மூவா் காயம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட மூவா் காயமடைந்தாா். அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் சுங்கச்சாவடி... மேலும் பார்க்க