பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புத்தகம் வெளியீடு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரிமலை பள்ளக்கனியூரில் உள்ள தனியாா் விடுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
விடுதி நிா்வாகி தேன்மொழி தலைமை வகித்தாா். ஏலகிரி மலை ஊராட்சித் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன்முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, டி.எஸ்.பி. சவுமியா ஆகியோா் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த புத்தகம் வெளியிட்டனா்.
இதைத் தொடா்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து அனைவரும் பேசினா்.
இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணி யாற்றிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நகா்மன்றத் தலைவகள் சங்கீதா வெங்கடேஷ், காவியா விக்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.