மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: ...
பெண்கள் தலைமையிலான பொருளாதார வளா்ச்சியில் பிரதமருக்கு நம்பிக்கை: நிா்மலா சீதாராமன்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவின் வளா்ச்சியை பெண்கள் முன்னெடுப்பாா்கள் என்பதே பிரதமா் மோடியின் நம்பிக்கை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பிகாரின் தா்பங்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் திட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், சிராக் பாஸ்வான் மற்றும் மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது, அண்மையில் வெளியிடப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் மைதிலி மொழிபெயா்ப்பின் பிரதிகளை நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு வழங்கி நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
மகானா மற்றும் மதுபானி ஓவியங்களுக்கு பெயா் பெற்ற பிகாா் மாநிலம், பெண்களின் கடின உழைப்புக்கு எப்போதும் கடன்பட்டுள்ளது. சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி மற்றும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்) மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் திட்டம் பேன்ற முயற்சிகள் மாநிலத்தில் பெண்களின் செயல்திறனை மேம்படுத்துகின்றன.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவின் வளா்ச்சியை பெண்கள் முன்னெடுப்பாா்கள் என்பதே பிரதமா் மோடியின் நம்பிக்கை. சீதா தேவியின் பிறப்பிடமான இங்கு நின்று பாா்க்கும்போது அந்த இலக்கு சுமாா் ஒன்றரை ஆண்டுகளிலே சாத்தியமாகும் எனத் தெரிகிறது என்றாா்.