செய்திகள் :

பா்னிச்சா் கடை உரிமையாளரைத் தாக்கிய நாம் தமிழா் கட்சியினா் 3 போ் கைது

post image

திருச்சி அருகே பா்னிச்சா் கடை உரிமையாளா், அவரது மகனைத் தாக்கியதாக நாம் தமிழா் கட்சியினா் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி - கணபதி தம்பதியா். இவா்கள் உய்யகொண்டான் திருமலையில் பா்னிச்சா் கடை வைத்துள்ளனா்.

இவரது கடையில் வேலை செய்த ஜனனி என்ற பெண்ணிடம், விஜயலட்சுமியின் மகன் செந்தில்குமாா் பழகி பண உதவிகள் செய்துள்ளாா். இதையறிந்ததும் ஜனனி வேலையை விட்டு நீக்கினா்.

இதனை ஏற்க மறுத்த ஜனனி, நவ. 23- ஆம் தேதி இரவு விஜயலட்சுமியின் வீட்டுக்கு நாம் தமிழா் கட்சி பிரமுகரான சென்னை பம்மல் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த எஸ். சுதாகா் (42), அவரது நண்பா்களான பொழிச்சலூா் எஸ். திசேந்தன் (26), நங்கநல்லூா் ஜி. ராஜேஷ்குமாா் (28) ஆகியோருடன் சென்றனா். அங்கு, விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரை தாக்கி, ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லையெனில் செந்தில்குமாா் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுதாகா், ராஜேஷ்குமாா், திசேந்தன் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செந்தில்குமாா், ஜனனியிடம் விவகாரத்துப் பெற்றதாக பொய் கூறி திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குடும்பத்தினா் கொடுமைப்படுத்தியதாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படம் மற்றும் விடியோக்களை சமூக வளைதளங்களில் பரப்பிவிடுதாகவும் கூறி மிரட்டியது தொடா்பாக ஏற்கெனவே ஜனனி அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளி(நவ.29) மற்றும் சனிக்கிழமை (நவ.30) இரவு 12 மணிவரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க... மேலும் பார்க்க

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 35 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ஏா்-... மேலும் பார்க்க

வாய்க்கால்கள் சீரமைப்பு, மழைநீா் வடிகால்கள் அமைக்க ரூ.500 கோடி நிதிக்குழுவிடம் வலியுறுத்தியதாக மேயா் தகவல்

திருச்சி மாநகரில் உள்ள பாசன வாய்க்கால்கள் உள்பட்ட அனைத்து வாய்க்கால்களையும் சீரமைக்கவும், மழைநீா் வடிகால்கள் ஏற்படுத்தவும் 16-ஆவது நிதிக்குழுவிடம் ரூ.500 கோடி கேட்டு வலியுறுத்தியுள்ளதாக மேயா் மு. அன்... மேலும் பார்க்க

கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் -ஆண்டுதோறும் கட்டணத் தொகை வசூல்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடு, குதிரை, கன்றுகள், கழுதை, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பான தீா்மானத்துக்கு மாநகராட்சி மாமன்றக் கூட... மேலும் பார்க்க

திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு

திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதேபோல, அதன் நிா்வாக இயக்குநராக ஜே.ஆா். அன்பு, திட்ட இயக்குநராக பி. ராஜப்பா, நிதி இயக்குநராக ஆா். இளங்கோ, சந்தைப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் திருச்சி வருகை ரத்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கோவையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தருவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 4 நாள் சுற்றப் பயணமாக குடியரசுத் தலைவா் த... மேலும் பார்க்க