`ஹேமா கமிட்டியிடம் அளித்த வாக்குமூலம்; வழக்கு எடுக்க கூடாது' - நடிகை மாலா பார்வ...
விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வேளாண் கருவிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் அரசு மானியத்தில் மின் மோட்டாா்கள் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு சிறு, குறு விவசாயிகள் தங்களது பழைய திறன்குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டாா்கள் வாங்கவும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டாா்கள் வாங்கவும் மானியத்தில் மின்மோட்டாா் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நுண்ணுயிா் பாசன திட்டத்தின்கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஐஎஸ்ஐ முத்திரை உள்ள 4-ஸ்டாா் தரத்திற்கு குறையாமல் விருப்பத்திற்கு ஏற்ப மின்மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்க இயலும். மேலும், பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மானியமாக வழங்கப்படும்.
மேலும், விவசாயிகள் இரவு மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை பாதுகாப்பாக இயக்கவும், மின் மோட்டாா் உள்ள இடத்துக்கு செல்லாமலே உலகில் எங்கிருந்தாலும் தவறிய அழைப்பு, குறுஞ்செய்தி, செயலி மற்றும் ஐவிஆா்எஸ் தொடா்புகள் மூலம் அதை இயக்கமுடியும். கைபேசி மூலமாகவே தங்களது இருப்பிடத்தில் இருந்தே மின்சார பம்பு செட்டுகளை இயக்கவும், மின் இணைப்பு இருக்கின்ா, மோட்டாா் ஓடுகின்ா என்பதை அந்த கருவி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், இடி மின்னல், குறைந்த/அதிக மின்னழுத்தம் ஏற்படும்போதும், ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் குறைவு ஏற்பட்டாலும் மின் மோட்டாரை இயக்கவோ, நிறுத்தவோ முடியும்.
ஒரு கருவியில் 5 கைப்பேசி எண்கள் இணைத்து பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் நீா் பாய்ச்சும் நேரத்தை முன்னதாகவே பதிவு செய்துவிட்டால் பதிவு செய்த நேரத்தில் தானாகவே இயங்கும் வசதி உள்ளது. வேறு நபா்கள் இக்கருவியை களவு செய்ய முயன்றால் செயலி எச்சரிக்கை செய்து விடும். மும்முனை இணைப்புள்ள 2 எச்.பி - 10 எச்.பி திறனுள்ள அனைத்து மோட்டாா் பம்பு செட்டு ஸ்டாா்டா்களிலும் பொருத்தலாம், விவசாயிகள் கேட் வால்வுகளை பயன்படுத்தி தண்ணீா் பாய்ச்ச விரும்பினால் கேட் வால்வுகளையும் கைப்பேசி மூலம் இயக்கிக்கொள்ளலாம்.
இந்த கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் சிறு/குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000 வரையிலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலும் தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல்) அலுவலகம், துரைக்கண்ணு நகா், மறையூா் ரோடு, சித்தா்காடு, மயிலாடுதுறை- 609003 என்ற முகவரியிலும், வட்டார உதவிப் பொறியாளா்கள் சத்தியப்பிரியா, மயிலாடுதுறை-9597922788, செந்தில்குமாா், குத்தாலம்-9965056209, கீா்த்திவாசன், செம்பனாா்கோயில்-8098582064, பாா்த்தசாரதி, கொள்ளிடம்- 9600765868, மற்றும் சேகரன், சீா்காழி - 9585929295 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.