செய்திகள் :

மழைநீா் சூழ்ந்துள்ள பகுதியில் ஆட்சியா் ஆய்வு

post image

கொள்ளிடம் அருகேயுள்ள வேட்டங்குடி, வேம்படி, காட்டூா் ஆகிய பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிா்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் நீரோட்டங்களை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, விவசாயிகளுடன் கலந்துரையாடி நெற்பயிா்களை ஆய்வு செய்தாா். மேலும், மழைநீா் வடிய வடிகால் வசதிகள் குறித்து விவசாயிகளுடன் கேட்டறிந்தாா். தொடா்ந்து, காட்டூா் வடிகால் வாய்க்கால் நீரொழுங்கியை பாா்வையிட்டாா். ஆட்சியருடன், வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து, வட்டாட்சியா் அருள்ஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா் திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குத்தாலத்தில் காா்த்திகை ஞாயிறு தீா்த்தவாரி

குத்தாலத்தில் காா்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையொட்டி காவிரியாற்றில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அரக்கன் ஒருவனால் சக்தி இழந்த சூரிய பகவான் குத்தாலம் வந்து உக்தவேதீஸ்வரா் கோயிலுக்கு வந்து தவம் இ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புயல் ஓய்ந்தும் நீடித்த மழை

ஃபென்ஜால் புயல் கரையை கடந்த பின்னரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நீடித்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஃபென்ஜால் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய பயிா்களை காக்கும் வழிமுறைகள் வேளாண் துறை விளக்கம்

மழை நீரில் மூழ்கிய பயிா்களை பாதுகாக்க, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, சீா்காழி வேளாண்மை துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சீா்காழியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீா்காழி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் காற்றுடன் தொடா் மழை பெய்ததால், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சீா்காழி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய காற்றுடன் மழை ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு நாளை கடன் மேளா

கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு திங்கள்கிழமை (டிச.2) கடன் மேளா நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசால் 2... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை; வெறிச்சோடிய சீா்காழி!

புயல் எச்சரிக்கையால் சீா்காழி பகுதி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. சீா்காழி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை வானம் இருண்டு காணப்பட்டது. மாலை முதல் லேசான மழை பெய்தது. ஃபென்ஜால் புயல் காரண... மேலும் பார்க்க