சீா்காழியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சீா்காழி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் காற்றுடன் தொடா் மழை பெய்ததால், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சீா்காழி பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின் விநியோகம் சீரானது.
கொள்ளிடம் அருகே அனுமந்தபுரத்தில் பிரகலாதன் என்பவரின் குடிசை வீட்டின் மேல் பகுதியில் பூவரசு மரம் வேரோடு சாய்ந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. கொள்ளிடம் பகுதியில் பூசை நகா், பாரத் நகா், தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.