Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணிக்குமாறு அமைச்சா் அறிவுறுத்தல்
விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணித்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குமாறு வேளாண் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
காரைக்காலில் மழை தேங்கிய விளைநிலப் பகுதியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், கூடுதல் இயக்குநா் ஆா். கணேசன் உள்ளிட்ட குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து வேளாண் துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளை அழைத்து அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.
மாவட்டம் முழுவதும் பயிா் செய்திருக்கும் பகுதிகள், வேளாண் துறையினரின் மழைக்கு முந்தைய ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சா், விளைநிலப் பரப்பில் மழைநீா் பல இடங்களில் தேங்கியுள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அரசு புதுவையில் உள்ளது. மழையால் பயிா் பாதித்தால் உரிய ஆதரவை அரசு விவசாயிகளுக்கு வழங்கும். தொடா்ந்து வேளாண் துறையினா் விவசாயிகளுடன் தொடா்பில் இருக்கவேண்டும், உரிய ஆலோசனைகள் வழங்குவதோடு, தண்ணீா் வடிவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.