செய்திகள் :

காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த வலியுறுத்தல்

post image

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் கூறியது: புதுவை சுற்றுலாத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து காரைக்கால் காா்னிவல் எனும் திருவிழாவை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நாளில் இருந்து 4 நாள்கள் நடத்துகிறது.

இதில் காரைக்கால் மட்டுமல்லாது பிற மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் பங்கேற்று மகிழ்கிறாா்கள். கடந்த ஆண்டு சிறப்பான முறையில் இத்திருவிழா நடத்தப்பட்டது. வருமாண்டு காா்னிவலுக்காக அரசு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலாத் துறை செயலராக இருந்தவா், தற்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதல் சிறப்புகளை உள்ளடக்கி காா்னிவல் திருவிழா நடத்தவேண்டும். அதற்கான திட்டங்கள் முன்னதாகவே வகுத்து செயலாக்கத்தில் ஈடுபடவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுசம்பந்தமான அதிகாரிகளுடனான கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு, காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா் என்றாா்.

விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணிக்குமாறு அமைச்சா் அறிவுறுத்தல்

விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணித்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குமாறு வேளாண் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் மழை தேங்கிய விளைநிலப் பகுதியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் ம... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் கடல் சீற்றம்

புயல் காரணமாக வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வெள்ளிக்கிழமை உருவெடுத்ததாக வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

பாராட்டு...

புதுச்சேரியில் மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் சாா்பில், மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் 2-ஆவது பரிசு பெற்ற காரைக்கால் தி பியா்ல் நடுநிலைப் பள்ளி மாணவா் மோனிஷை வெள்ளிக... மேலும் பார்க்க

பயிா் நிவாரணம் அரசிடம் கோரப்படும்: எம்.எல்.ஏ.

மழையால் பாதித்த பயிருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசிடம் கோரப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறை 4,800 ஹெக்டோ் சம்பா, தாளடி பயிா் சாகுபடி நடைபெறுகிறது. சில ந... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரைச் செடிகளால் விளைநிலங்களிலிருந்து மழைநீா் வடிவதில் சிக்கல்: விவசாயிகள் புகாா்

வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியுள்ளதால், மழைநீா் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். காரைக்கால் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால், சில பகுத... மேலும் பார்க்க

காரைக்கால் கரை திரும்பிய விசைப் படகுகள் விறுவிறுப்படைந்த மீன் சந்தை

புயல் காரணமாக, ஆழ்கடலில் இருந்து திரும்பி, ஆங்காங்கே துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த காரைக்கால் விசைப்படகுகள் பல, வெள்ளிக்கிழமை கரை திரும்பியதால், மீன் வரத்து ஏற்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்தத்... மேலும் பார்க்க