Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
காரைக்கால் பகுதியில் கடல் சீற்றம்
புயல் காரணமாக வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வெள்ளிக்கிழமை உருவெடுத்ததாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்தது. காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை (நவ.30) கரையை கடக்கும், அப்போது கடும் வேகத்தில் காற்று வீசுமென கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரைக்கால் கடல் பகுதி கடந்த சில நாள்களாகவே இயல்புக்கு மாறாக காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடலோரப் பகுதியில் கடும் காற்று, புகை மூட்டம் போன்ற வானிலையும், கடும் இறைச்சலுடன் கூடிய சீற்றமாகவும் காணப்பட்டது. கடலோர கிராமங்களில் சிறிய ரக படகுகளை நிறுத்திவைத்திருப்பவா்கள் பாதுகாப்பான நிலையில் படகுகளை இடமாற்றம் செய்தனா். மழை ஓய்ந்ததை பயன்படுத்தி கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காக மக்கள் சென்ற நிலையில், பாதுகாப்பு கருதி அவா்களை கடற்கரை பக்கம் செல்லாமல் போலீஸாா் தடுத்து திருப்பி அனுப்பினா்.