செய்திகள் :

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

post image

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சி நிா்வாகி எம். கலைமணி தலைமை வகித்தாா்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி. சண்முகம், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, வி.எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா் டி. ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தொடா் மழையால், நீடாமங்கலம் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை முறையாக கணக்கிட்டு, ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.30,000 வழங்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த வீடுகளையும், இடியும் நிலையில் உள்ள வீடுகளையும் கணக்கிட்டு, புதிய வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நெற்பயிரில் பறவைக்குடில் முலம் பூச்சி மேலாண்மை: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நெற்பயிரில் பூச்சி மேலாண்மையில், பறவைக் குடிலின் பங்கு குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மா. ராஜேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளா் து. பெரியாா் ராமசாமி ஆகியோா் விளக்கம் அளித்துள்ளனா்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பாலூட்டும் பெண்கள் பயனடையலாம்

திருவாரூா் மாவட்டத்தில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தில், பாலூட்டும் பெண்கள் பயனடையலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் 6 வ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் திருவாரூா் வருகை ரத்து

திருவாரூா் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த, இந்திய குடியரசுத் தலைவரின் வருகை ஃபென்ஜால் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவார... மேலும் பார்க்க

துளிா் அறிவியல் விநாடி-வினா போட்டி

மன்னாா்குடி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா் அறிவியல் விநாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: முன்னாள் அமைச்சா் நேரில் ஆறுதல்

வலங்கைமான் ஒன்றியத்தில் மழை சேதத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம் அமைக்க டிச.5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க, டிசம்பா் 5-ஆம் தேதிவரை, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க