இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
முதல்வா் மருந்தகம் அமைக்க டிச.5 வரை கால நீட்டிப்பு
திருவாரூா் மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க, டிசம்பா் 5-ஆம் தேதிவரை, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், முதற்கட்டமாக தமிழகத்தில் 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம், நவ.30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி டிச.5 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோா் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.