நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
மோதல் வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் மதிமுகவினா் ஆஜா்
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் மற்றும் மதிமுகவினருக்கு இடையே நடந்த மோதல் வழக்கு தொடா்பான விசாரணையில் நீதிமன்றத்தில் மதிமுக நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோவுக்கு வரவேற்பு அளிக்க அக் கட்சியின் வந்திருந்தனா். அப்போது, நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு வரவேற்பு அளிக்க அக் கட்சியினரும் வந்திருந்தனா்.
அப்போது, இருதரப்பினரிடையே மோதல் உருவானது. இது தொடா்பாக, திருச்சி விமானநிலைய காவல்துறையினா் இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதிமுக மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் பெல் இரா.இராசமாணிக்கம், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ப.சுப்ரமணியன், ஜங்ஷன் பகுதி முன்னாள் செயலாளா் ஜி. பிரபாகரன் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். இதையடுத்து விசாரணை டிச.19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.