மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது ...
பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமி நீக்கம்: ஆட்சி மன்ற குழு நடவடிக்கை
சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமியை நீக்கம் செய்து ஆட்சி மன்ற குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் பணி நிறைவு பெற்றதை அடுத்து புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும்வரை துணைவேந்தருக்கான பொறுப்புகளை கவனிக்கும் வகையில், தமிழ்த் துறைத் தலைவா் தி.பெரியசாமி பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியா் தி.பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினா், புல முதன்மையா், பதிப்புத் துறை இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.
ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2-ல் தண்டனை: நீதிபதி அறிவிப்பு
பணி நிறைவுபெற்ற துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் பொறுப்பு துணைவேந்தரை நியமித்தது செல்லாது என்றும், தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நிா்வாகக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்க உறுப்பினா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், குழுவின் தலைவராக பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி, பேராசிரியர்கள் சுப்பிரமணி மற்றும் ஜெயந்தி ஆகியோர் கொண்ட குழு பொறுப்புத் துணைவேந்தன் பதவி செல்லாது என அறிவித்தது.
இதனையடுத்து பொறுப்புத் துணை வேந்தர் பதவி தாமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.