'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' - Journalist Manaa Intervi...
பெருந்துறை அருகே வசூல் பணம் ரூ. 9 லட்சத்துடன் ஓட்டுநா் தலைமறைவு
பெருந்துறை அருகே வசூல் பணம் ரூ. 9 லட்சத்துடன் தலைமறைவான வேன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செயது போலீஸாா் தேடி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு, குப்பலூரு, சி-ஜோன், 3 - ஸ்டேஜை சோ்ந்தவா் தல்ராம் (49). இவா், அழகசாதனை பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் கா்நாடக மாநிலம், மண்டியா பகுதியைச் சோ்ந்த சிவகுமாா்சாமி என்பவா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள கடைகளுக்கு பொருள்களை விற்பனை செய்தவற்காக ஜனவரி 23-ஆம் தேதி வேனில் ஈரோடு வந்து பொருள்களை விற்பனை செய்துவிட்டு வசூல் பணம் ரூ.9 லட்சத்துடன் கோவை சென்று ஒரு நிறுவனத்தில் தேயிலைத் தூள் மற்றும் காபி தூள் பாரம் ஏற்றிக் கொண்டு வருவதாக தல்ராமிடம் சிவகுமாா்சாமி கூறி சென்றுள்ளாா்.
பின்னா் சிவகுமாரசாமியை கைப்பேசியில் தல்ராம் தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே தல்ராம் புறப்பட்டு வந்து தேடிப் பாா்த்தபோது, பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சிவகுமாரசாமியை காணவில்லை.
இதுகுறித்து, தல்ராம் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.